search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு - பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்
    X

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு - பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் சம்பளம் ரூ.2.80 லட்சமாகவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் ரூ.2.50 லட்சமாகவும் உயர்த்தி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது,
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கான சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைத்திருந்தது. அதனை ஏற்று ‘ஐகோர்ட்டு நீதிபதிகள் சட்டம் 1954’ மற்றும் ‘சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சட்டம் 1958’ ஆகிய சட்டங்களில் திருத்தம் செய்து புதிய மசோதா தயார் செய்யப்பட்டது.

    ‘ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்’ (ஊதியம் மற்றும் பணி விதி முறைகள்) திருத்த மசோதா 2017 என பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதாவை நேற்று பாராளுமன்றத்தில் சட்டமந்திரி ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.



    இந்த திருத்த மசோதாவின் படி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் சம்பளம் ரூ.2.80 லட்சமாகவும் (தற்போதைய சம்பளம் ரூ.1 லட்சம்) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் ரூ.2.50 லட்சமாகவும் (90 ஆயிரம்) உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    அதேபோல் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளின் சம்பளம் ரூ2.50 லட்சமாகவும் (90 ஆயிரம்) ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் ரூ.2.25 லட்சமாகவும் (80 ஆயிரம்) உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சம்பள உயர்வு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். மேலும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கான படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்துவதற்கும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டு உள்ளது
    Next Story
    ×