search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பால் பா.ஜ.க. வாக்கு வங்கி சரிவு
    X

    ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பால் பா.ஜ.க. வாக்கு வங்கி சரிவு

    ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக பா.ஜனதா ஓட்டு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தி உள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 117 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று இருந்தது.

    இந்த தேர்தலில் 150 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்து தேர்தல் பணிகளை செய்தனர். கட்சி தலைவர் அமித்ஷா இதற்கான வியூகங்களை வகுத்து இருந்தார்.

    ஆனால், 100 தொகுதிகளை கூட எட்ட முடியாமல் 99 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவை தான் காரணம் என்று கூறப்படுகிறது.


    குறிப்பாக கிராம பகுதிகளில் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கிராம பகுதி தொகுதிகளில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த இடங்களில் காங்கிரசுக்கு 62 இடங்களும், பா.ஜனதாவுக்கு 43 இடங்களும் கிடைத்துள்ளன.

    கட்ச் மற்றும் சவு ராஷ்டிரா பகுதி மக்கள் பா.ஜனதா மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர். இதனால் இந்த பகுதியில்தான் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

    பண மதிப்பிழப்பால் அவர்களுடைய சிறு சேமிப்பு பணத்தில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனர். இதனால்தான் அவர்கள் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் நகரங்களில் பா.ஜனதா அதிக இடங்களை குவித்துள்ளது. குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் உள்ள அகமதாபாத், சூரத், ராஜ்கோட் பகுதிகளில் பா.ஜனதாவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி காரணமாக இந்த பகுதி வர்த்தகர்கள் பா.ஜனதா மீது கடும் கோபத்தில் இருந்தார்கள். ஆனாலும், இதையும் மீறி பா.ஜனதாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    அதாவது நகர பகுதிகளில் ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

    சூரத்தில் பட்டேல் சமூகத்தினர் துணி வர்த்தகத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். ஜி.எஸ்.டி. பிரச்சினையால் அவர்களும் கோபத்தில் இருந்தனர்.

    தேர்தலுக்கு முன்பாக ஜவுளி பொருட்களில் ஜி.எஸ்.டி. வரி பெருமளவு குறைக்கப்பட்டது. இதனால் அவர்களுடைய கோபம் மாறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மொத்தம் 16 இடங்களில் 15 இடங்களை பா.ஜனதா கைப்பற்றி இருக்கிறது.

    ஆனால், மொத்தத்தில் பார்க்கும் போது ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு பிரச்சினை பா.ஜனதா ஓட்டு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×