search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு
    X

    பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு

    பெங்களூரு ஜெயிலில் சசிகலாவை டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை  டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது.

    இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பெங்களூரு சென்ற டிடிவி தினகரன் இன்று பிற்பகலில் சசிகலாவை சந்தித்து பேசினார்.  அவருடன் மருத்துவர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக், மருமகள் கீர்த்தனா, மகள் ஷகிலா, மருமகன் ராஜராஜன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அவர்களுடன் புகழேந்தியின் வழக்கறிஞர் அசோகனும் சென்றார்.



    அப்போது அவர் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் தினகரன் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் தமிழகம் திரும்பும் தினகரன், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிசம்பர் 1-ந்தேதி பகல் 12-15 மணியில் இருந்து 1-15 மணிக்கு அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.


    Next Story
    ×