search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள் - ஆதார் ஆணையம் அம்பலம்
    X

    ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள் - ஆதார் ஆணையம் அம்பலம்

    ஆதார் அடையாள அட்டையின் ரகசிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற விதிமுறையை மீறி 210 இணைய தளங்களில் வெளியானதாக தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஆதார் அடையாள அட்டையின் ரகசிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற விதியை மீறி அரசு இணையதளங்கள் செயல்பட்டுள்ளனவா என்ற கேள்வி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த கேள்விக்கு ஆதார் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்திய தனித்துவ அடையாள அங்கீகரிப்பு ஆணையம் பதில் அளித்துள்ளது.

    அந்த பதிலில், “பயனாளிகள் என்ற வகையில் ஆதார் அடையாள அட்டைதாரர்களின் பெயர்கள், முகவரிகள் மத்திய, மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இது விதிமீறல் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த இணையதளங்களில் இடம் பெற்றிருந்த ஆதார் தகவல்கள் நீக்கப்பட்டு விட்டன” என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், “எங்கள் மூலமாக ஆதார் தகவல்கள் ஒருபோதும் அம்பலப்படுத்தப்பட மாட்டாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×