search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்: கர்நாடக மந்திரி
    X

    கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்: கர்நாடக மந்திரி

    பெண் பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் கர்நாடக மந்திரி பேட்டி

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்ளூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லிங்கேஷ் கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.உளவுப்பிரிவு ஐ.ஜி பி.கே.சிங்.தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 மாதம் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் பிடிபடவில்லை. ஏற்கனவே போலீசார் சந்தேகப்படும் குற்றவாளிகள் 2 பேரின் 3 உருவங்கள் அடங்கிய புகைப்படங்களை வெளியிட்டனர். என்றாலும் இது வரை இந்தக்கொலையில் துப்பு எதுவும் துலங்கவில்லை.

    இந்தக் கொலையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கர்நாடக உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.இது குறித்து அவர் பெங்ளூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே இதே பாணியில் கொல்லப்பட்ட முற்போக்கு சிந்தனையாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோரின் வழக்குகளையும் அலசி ஆராய்ந்துள்ளனர்.

    இதுவரை கிடைத்து உள்ள ஆதாரங்கள், சாட்சியங்களின்படி கொலையாளிகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. எஸ்.ஐ.டி. அதிகாரிகள் கொலையாளிகளை அடையாளம் கண்டு உள்ளனர். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டோம். இன்னும் ஒரு வாரத்தில் கொலையாளிகளின் பெயரை அறிவிக்க இருக்கிறோம். அந்த கொலையாளிகள் முந்தைய வழக்குகளில் தொடர்பு உடையவர்களா? என்பதை எல்லாம் இப்போது கூற முடியாது.

    வழக்கு விசாரணை 90 சதவீதம் முடிந்து விட்டது. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் என்னிடம் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் வரை சாட்சியங்கள் சேகரிக்கும் பணி தொடரும். இந்த கொலையின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவது கர்நாடக அரசின் கடமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×