search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பத்திரிகையாளர் கொலையில் துப்பு துலங்கியது: ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்தது
    X

    பெண் பத்திரிகையாளர் கொலையில் துப்பு துலங்கியது: ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்தது

    பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையில் துப்பு துலங்கியது அடுத்து ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் கவுரிலங்கேஷ் (வயது 55). பிரபல பெண் பத்திரிகையாளரான இவர் தனது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையில் துப்பு துலங்கியுள்ளது. நக்சலைட்டுகளை சரணடைய வைத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நக்சலைட்டுகளே அவரைச் சுட்டுக்கொன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கவுரிலங்கேஷ் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த வாலிபர் ஹெல்மெட் மற்றும் ஜர்கின் அணிந்து உள்ளார். 2 பேர் வீட்டுக்கு வெளியே காத்திருப்பதும், ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சியை ஆந்திர போலீசாருக்கு, கர்நாடக போலீசார் அனுப்பி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து நக்சலைட்டுகளை பிடிக்க கர்நாடகாவைச் சேர்ந்த சிறப்பு புலனாய்வு படை (எஸ்.ஐ.டி) போலீசார் ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளுக்கு விரைந்து உள்ளனர்.

    பெண் பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் கொலை குறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியதாவது:-

    பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் கொலை தொடர்பாக முக்கிய துப்பு கிடைத்துள்ளது. கொலை கும்பல் விரைவில் பிடிபடும். இதுதொடர்பாக நானும், முதல்-மந்திரி சித்தராமையாவும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×