search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரி லங்கேஷ் படுகொலைக்கு சோனியா, ராகுல் கண்டனம்
    X

    கவுரி லங்கேஷ் படுகொலைக்கு சோனியா, ராகுல் கண்டனம்

    கவுரி லங்கேஷ் படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தின் அருகே நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொடூர படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நாட்டில் வேரூன்றிப்போன கொடுமைகளை எதிர்த்து கவுரி லங்கேஷ் தனது கருத்துகளை அச்சமின்றி சுதந்திரமாக எழுதி வந்தததாக குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, மதச்சார்பற்றவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இதுபோல் தொடர்ந்து கொல்லப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை சகித்துக் கொள்ள முடியாது.

    இதன் மூலம் மாற்றுக் கருத்து மற்றும் சித்தாந்தங்களில் வேறுபாடு கொண்டவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற சூழல் உருவாகியுள்ளது. கவுரி லங்கேஷ் படுகொலை நமது ஜனநாயகத்தில் சோகமயமான சம்பவமாக பதிவாகியுள்ளது. நமது சமூகத்தில் சகிப்புத்தன்மையின்மையும், அநீதியும் தனது கோரமுகத்தை காட்டத் தொடங்கியுள்ளதை இந்த படுகொலை சுட்டிக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமைய்யாவுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், அம்மாநிலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளதகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மறைந்த கவுரி லங்கேஷ் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் சோனியா கூறியுள்ளார்.


    கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து அதிர்ச்சியும், வேதைனையும் அடைந்துள்ளேன் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    உண்மையை யாராலும் ஒடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, உண்மையை ஒடுக்க முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சித்தாந்தம் இந்தியாவில் எடுபடாது. திறமைவாய்ந்த இந்துத்துவா அரசியல்வாதியான மோடியின் பேச்சுக்கு வெளிநாடுகளில் ஒரு அர்த்தமும், உள்நாட்டில் இரு அர்த்தமும் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
    Next Story
    ×