search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. ஆஸ்பத்திரியில் மேலும் 5 குழந்தைகள் பலி - ஆக்ஸிஜன் விநியோகத்தில் முறைகேடு
    X

    உ.பி. ஆஸ்பத்திரியில் மேலும் 5 குழந்தைகள் பலி - ஆக்ஸிஜன் விநியோகத்தில் முறைகேடு

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஆஸ்பத்திரியில் சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு நடந்து இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. என்றாலும் தினமும் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்த வண்ணம் உள்ளது. இது முதல்-மந்திரி ஆதிநாத் யோகிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்பத்திரியில் போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமை செயலாளர் அளவில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விசாரணையில் சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆஸ்பத்திரியின் மூத்த டாக்டர்கள் 2 பேருக்குதொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோரக்பூர் ஆஸ்பத்திரியில் மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் கடந்த 48 மணிநேரத்தில் உயிர் இழந்தன. இதையடுத்து கடந்த 7-ந்தேதி முதல் உயிர் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே கோரக்பூர் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பலியான சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடந்தது, இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் குழந்தைகள் உயிர் இழந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×