search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான கம்பெனிக்கு ரூ.900 கோடி கடன் பெற்று விஜய் மல்லையா சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினார்
    X

    விமான கம்பெனிக்கு ரூ.900 கோடி கடன் பெற்று விஜய் மல்லையா சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினார்

    விமான கம்பெனிக்கு ரூ.900 கோடி கடன் பெற்று விஜய் மல்லையா ரூ.260 கோடியை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    பெங்களூர் தொழில் அதிபர் விஜய்மல்லையா தனது கிங் பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

    இதனால் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் யோகேஷ் அகர்வால் மற்றும் கிங்பி‌ஷர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வங்கி அதிகாரிகள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விஜய் மல்லையா மற்றும் நேற்று முன்தினம் கைதான வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் மீதும் மும்பை பொருளாதார பிரிவு கோர்ட்டில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஐ.டி.பி.ஐ. வழங்கிய ரூ.900 கோடி கடனில் மோசடி நடந்துள்ளது. இதில் ரூ.260 கோடியை கிங் பி‌ஷர் நிறுவனம் வேறு வகையான செலவினங்களுக்கு திருப்பி விட்டுள்ளது. மேலும் ரூ263 கோடி பணம் ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கவும், வருமான வரி மற்றும் கடன் தவணைகள் மற்றும் இதர வரிகள் செலுத்துதல் போன்ற சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மேலும் பொது ஊழியர்களான வங்கி அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அரசுக்கு ரூ.900 கோடி இழப்பு ஏற்படுத்தி உள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் கிங்பி‌ஷர் அதிகாரிகள் மீது கிரிமினல் குற்றத்தில் ஈடுபடுதல், மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×