search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற அசாம் வாலிபரை தூக்கில் போடவேண்டும்: பொதுமக்கள் ஆவேசம்
    X

    சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற அசாம் வாலிபரை தூக்கில் போடவேண்டும்: பொதுமக்கள் ஆவேசம்

    சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற அசாம் வாலிபரை கொச்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமிருல் இஸ்லாம் (வயது 21) என்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். செக்ஸ் சில்மி‌ஷம் செய்த அமிருல் இஸ்லாமை மாணவி ஷிஜா செருப்பால் அடித்ததால் இந்த கொலையை அவர் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கொச்சி ஜெயிலில் அடைக்கப்பட்ட அமிருல் இஸ்லாம்தான் கொலையாளி என்பதை உறுதி செய்ய ஜெயிலில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் சாட்சிகள் அமிருல் இஸ்லாமை அடையாளம் காட்டினார்கள்.

    இதைதொடர்ந்து அமிருல் இஸ்லாமை போலீசார் தங்கள் காவலில் எடுத்து கொலை நடந்த வீடு உள்பட சில இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அமிருல் இஸ்லாமை கொச்சி கோர்ட்டில் மாலையில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.



    நேற்று போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் அமிருல் இஸ்லாம் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது முதல் முறையாக அவனது முகத்தை மூடாமல் போலீசார் அழைத்து வந்திருந்தனர். மேலும் கொலையாளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் தகவல் பரவியதை தொடர்ந்து அங்கு பொதுமக்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சியினரும் திரளாக கூடி இருந்தனர்.

    போலீஸ் வேனில் இருந்து அமிருல் இஸ்லாம் இறங்கியதும் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    அமிருல் இஸ்லாமை தூக்கில் போட வேண்டும், இதுபோன்ற கொடூர கொலையாளிகளுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்று கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அமிருல் இஸ்லாமை நோக்கி பொதுமக்கள் ஆவேசத்துடன் முன்னேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பிறகு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அசாம் வாலிபர் அமிருல் இஸ்லாமை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    இந்த வழக்கை விசாரித்த கொச்சி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி மஞ்சு, அமிருல் இஸ்லாமிடம் ஏதும் கூற விரும்புகிறீர்களா? என்று கேட்டதற்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் பதில் அளித்தார்.

    இதைதொடர்ந்து வருகிற 13-ந்தேதி வரை அமிருல் இஸ்லாமை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கில் துப்புதுலக்கிய போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியாவும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
    Next Story
    ×