search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • மலிகாய்யா கட்டேதார் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
    • சாரதா மோகன் ஷெட்டி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

    கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    கட்டேதார் கலபுரகி மாவட்டத்தின் அஃப்ஜல்புர் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ.-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா மாநில முன்னாள் மந்திரியும் ஆவார்.

    கலபுரகி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் சொந்த மாவட்டம் ஆகும். கார்கே 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். கார்கேயின் மருமகன் ராதாகிருஷ்ணா டோட்டாமணி கலபுரகி (குல்பர்கா) தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த மாதம் தொடக்கத்தில் கட்டேதார் சகோதரர் நிதின் வெங்கையா கட்டேதார் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இதனால் மலிகய்யா கட்டேதார் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.

    கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அஃப்ஜல்புர் தொகுதியில் எம்.ஒய். பாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மலிகய்யா கட்டேதார் 3-வது இடம் பிடித்தார். அவரது சகோதரர் நிதின் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார்.

    மலிகாய்யா முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். பின்னர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவரது சகோதரர் பா.ஜனதா கட்சியில் இணைந்த விவகாரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரை விமர்சித்திருந்தார்.

    கார்கேயின் மகனும், கர்நாடகா மாநில மந்திரியுமான பிரியங்க் கார்கே, கட்டேதார் காங்கிரஸ் கட்சியில் இணைய முக்கிய காரணமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.

    சாரதா மோகன் ஷெட்டி உத்தாரா கன்னடா மாவட்டத்தின் கும்தா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 2013 மற்றும் 2018-ல் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிரியங்க் கார்கே ஆகியோர் இருவரையும் வரவேற்றுள்ளனர்.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 39.51 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 37.33 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 37 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 44.43 சதவீதமும், மகாராஷ்டிராவில் 32.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.

    இதில், மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வாக்களிக்க வந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    உத்தரகாண்டில் 24.83 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 25 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 30.5 சதவீதமும், மகாராஷ்டிராவில் 19.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    • இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி

    பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.




    இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-

    'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.

    • காந்திநகர் தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமித்ஷா 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • அமித்ஷா நேற்று தான் போட்டியிடும் காந்திநகர் தொகுதியில் 3 பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே-7ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் காங்கிரசின் சார்பில் சோனால் படேல் போட்டியிடுகிறார்.

    காந்திநகர் தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமித்ஷா 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அமித்ஷா நேற்று தான் போட்டியிடும் காந்திநகர் தொகுதியில் 3 பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். அப்போது பா.ஜனதா 400 தொகுதிகளில் வெற்றி பெறும். குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்து மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்நிலையில் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில் வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்தன. இதனால் பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வாத்துக்களுக்கு ஏவியான் இன்புளூ வன்சா என்ற பறவை காய்ச்சல் தொற்று பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    அதில் எடத்துவா பஞ்சாயத்து முதலாவது வார்டில் பறவை காய்ச்சல் தொற்று பாதித்திருந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்து உள்ளிட்ட பறவை இனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

    அதில் தொற்று பாதித்த பகுதிக்கு அருகே 21,537 பறவைகள் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பறவைகளை கொன்று எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பறவைகளை கொல்லும் பணியை சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று தொடங்கினர்.

    பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    பறவை காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி, வாத்து, காடை போன்ற நாட்டு பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 25-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று தேர்தல்.
    • அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் வாக்குப்பதிவு.

    நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்கள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படும் ஜோதி ஆம்கே நாக்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார்.

    2009-ம் ஆண்டில், ஜோதி ஆம்கேக்கு உலகின் 'உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது.

    தற்போது, ஜோதிக்கு 30 வயதாகிறது.

    • நாக்பூரில் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
    • 75 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டு செல்வதே எங்களது லட்சியம்.

    நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று வாக்களித்த மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    பின்னர் நிதின் கட்காரி பேசியதாவது:-

    நாட்டின் மிகப்பெரிய பண்டிகையை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம்.

    நாக்பூரில், வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சீக்கிரம் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு நான் குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டு செல்வதே எங்களது லட்சியம்.

    இந்த தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • வெறுப்பைத் தோற்கடித்து, ஒவ்வொரு மூலையிலும் 'அன்பின் கடை'யைத் திறக்கவும்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!

    உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், வரும் தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்கு என்ற தைலத்தைப் பூசி ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்.

    வெறுப்பைத் தோற்கடித்து, ஒவ்வொரு மூலையிலும் 'அன்பின் கடை'யைத் திறக்கவும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாடு முழுவதும் இன்று 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
    • ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி அனைவரும் வாக்களிக்க வருமாறு குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×