
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்கி ஷார்ட் (2), ரகானே (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை வீரர்களான சஞ்சு ஜாம்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (12), ராகுல் திரிபாதி (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரன் குவிக்க இயலவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் ஓரளவிற்கு அதிரடியாக விளையாடி 16 பந்தில் 24 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 153 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், அன்ட்ரிவ் டை 2 விக்கெட்டும், அஸ்வின், ராஜ்பூட், அக்சார் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.