search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி
    X

    சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி

    சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் வசந்தகுமார் ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
    சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி ப. சிதம்பரமும், பாஜக சார்பில் எச்.ராஜாவும் போட்டியிட்டனர். கார்த்தி ப.சிதம்பரம் 5,64,846 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எச்.ராஜா 2,33,237 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நாம் தமிழர் 72155 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 22922 வாக்குகளும், அமமுக 122474 வாக்குகளும் பெற்றன.



    விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 464667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் ஆர் அழகர்சாமி 315055 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நாம் தமிழர் 52591 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 56815 வாக்குகளும், அமமுக 107033 வாக்குகளும் பெற்றன.



    கன்னியாகுமரியில் வசந்தகுமார் 620594 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பி ராதாகிருஷ்ணன் 362976 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மக்கள் நீதி மய்யம் 8524 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 16796 வாக்குகளும், அமமுக 12324 வாக்குகளும் பெற்றன.
    Next Story
    ×