search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு பெட்டிகளை மாற்றுவது வழக்கமான நடைமுறைதான் - தலைமை தேர்தல் அதிகாரி
    X

    வாக்கு பெட்டிகளை மாற்றுவது வழக்கமான நடைமுறைதான் - தலைமை தேர்தல் அதிகாரி

    ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வாக்கு பெட்டிகளை மாற்றுவது வழக்கமான நடைமுறைதான் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்துள்ள பேட்டி விவரம்:-

    கேள்வி:- அரசு ஊழியர் மற்றும் அரசு சாரா ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவில் தாமதம் ஏதும் ஏற்பட்டதா? பலருக்கு இன்னும் ஓட்டு சீட்டே வரவில்லை என்று அரசு ஊழியர் சங்கம் கூறி இருக்கிறதே?

    பதில்:- இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம். அனைத்து தபால் ஓட்டு சீட்டுகளும் முறைப்படி வழங்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் இதை கவனித்து கொண்டார்கள்.

    தற்போது இதன் ஓட்டு பெட்டிகள் தேர்தல் கமி‌ஷன் வழிகாட்டுதல்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது.

    கே:- தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் தொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளே கைவசம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

    ப:- இது சம்பந்தமாகவும் கோர்ட்டில் விளக்கம் அளித்து விட்டோம். விசாரணை நிலுவையில் உள்ளது.

    கே:- ஓட்டு எந்திரங்களை தேனி தொகுதிக்கு மாற்றியது பற்றி என்ன கூறுகிறீர்கள்?


    ப:- தேர்தல் சாதனங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறைதான். தேர்தல் கமி‌ஷன் விதித்துள்ள விதிமுறைகள்படிதான் இவற்றை செய்தோம்.

    அரசியல் கட்சிகளுக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

    கோவை மற்றும் திருவள்ளூரில் பயன்படுத்தாத ஓட்டு எந்திரங்கள்தான் இவ்வாறு மாற்றப்பட்டன.

    ஓட்டு எந்திரங்கள் மாற்றப்படும் போது முதல்கட்ட பரிசோதனை நடைபெறும். பின்னர் ஓட்டு எந்திரங்கள் ஸ்டிராங் அறைக்கு கொண்டு செல்லப்படும். எத்தனை ஓட்டு பெட்டிகள் என்ற விவரமும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

    கே:- தேர்தல் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா சில அதிகாரிகளை மாற்றம் செய்ய கூறிய போதும், அதை செய்யவில்லை என்று கூறப்படுகிறதே? இதற்கு யார்தான் பொறுப்பு?

    ப:- எப்போது இது போன்ற பரிந்துரை வந்தாலும் அதுபற்றி தேர்தல் கமி‌ஷனுக்கு தகவல் அனுப்பி விடுவோம். தேர்தல் கமி‌ஷன் தான் இதில் முடிவு எடுக்கும்.

    இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.

    Next Story
    ×