search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு இடதுகை நடுவிரலில் அடையாள மை
    X

    4 தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு இடதுகை நடுவிரலில் அடையாள மை

    4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. #TNElections2019 #TNAssemblyBypoll

    சென்னை:

    வருகிற 19-ந் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தொகுதிகளுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    கட்சி தொண்டர்களும், வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த 4 தொகுதிகளிலும், அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.


    இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கும் தேவையான வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களும் தயாராக உள்ளன.

    அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்படுகிறார். இந்த தொகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வாக்காளர்கள் அனைவருக்கும் பூத்சிலிப் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பூத்சிலிப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. எனவே வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் 4 தொகுதிகளிலும், ஓட்டுப் போடுபவர்களுக்கு இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. #TNElections2019 #TNAssemblyBypoll

    Next Story
    ×