search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி பிறந்த நாளில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் - மு.க.ஸ்டாலின்
    X

    கருணாநிதி பிறந்த நாளில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் - மு.க.ஸ்டாலின்

    கருணாநிதி பிறந்த நாளில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடை பெறுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளாச்சேரி, திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்த போது தான் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தது. அப்போது அவர் உயிரோடு இருந்தாரா? சுய நினைவோடு இருந்தாரா? என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. ஜெயலலிதா மரணம் மர்மமாகவே உள்ளது.

    ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று நீதி மன்றத்துக்கு சென்று வெற்றி பெற்ற சரவணன்தான் இப்போது தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.


    விளாச்சேரியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வருகிற 23-ந் தேதி வெளியாகிறது. அன்று மோடி வீட்டுக்கு போவது போல எடப்பாடி பழனிசாமியும் வீட்டுக்கு போய் விடுவார். கருணா நிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி மத்தியிலும், மாநிலத்திலும் புதிய ஆட்சி மலரும். அப்போது ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் போடுவதுதான் முதல் வேலை. இதை நான் சொல்லும் போதெல்லாம் அ.தி.மு.க. தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    அவர்களே எங்களிடம், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தான் ஜெயலலிதா சாவில் உள்ள மர்மம் விலகும் என்று கூறுகிறார்கள். கோடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும் முழுமையாக விசாரிக்கப்படும்.

    பெரம்பலூர் எம்.எல்.ஏ. வேலை வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி பெண்களை வரவழைத்து தனது அலுவலகத்திலேயே அசிங்கப்படுத்தி போட்டோ - வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.

    இதுகுறித்து வக்கீல் போலீசிடம் புகார் கொடுத்தார். ஆனால் அவரை பிடித்து உள்ளே வைத்து விட்டார்கள். இதுபோன்ற அக்கிரமித்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #MKStalin #DMK

    Next Story
    ×