search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே ரூ.50 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி
    X

    ஜெயங்கொண்டம் அருகே ரூ.50 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி

    ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.50 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #LoksabhaEelctions2019

    ஜெயங்கொண்டம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து முக்கிய இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் மகிமைபுரம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தவேல் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சரக்கு லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

    சந்தேகமடைந்த அதிகாரி கள் அந்த லாரியை தடுத்தி நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 90 பெட்டிகளில் இருந்தது. ரூ. 50 லட்சம் மதிப்பிலான அந்த போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் லாரியை பறிமுதல் செய்ததோடு, அதனை ஓட்டிவந்த திருப்பூர் மாவட்டம் சூரியப்பன் பள்ளத்தை சேர்ந்த நேரு (வயது 38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போதை பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  #LoksabhaEelctions2019

    Next Story
    ×