search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி
    X

    அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி

    அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். #senthilbalaji #admk #TNElections2019 #mkstalin

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் அருகே உள்ள புதுப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மக்கள் தன்னெழுச்சியோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். அவர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறுவார். இதே நிலைதான் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் காணப்படுகிறது.

    இந்த தேர்தலோடு மத்தியில் ஆளும் மோடியும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டுக்கு செல்வது உறுதி. ராகுல்காந்தி பிரதமர் ஆவார். 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தற்போது அறிவித்துள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்.

    கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரசாரம் தொடர்பான எங்கள் மனுவை இரவு நேரமாக இருந்தாலும் அவர் வாங்கியிருக்க வேண்டும். ஏதோ முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தது போல சாதாரணமாக கையாண்டு இருக்கிறார்.


    காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கலெக்டர் பேசும்போது, தேர்தலை நிறுத்த பரிந்துரைப்பேன் என்று கூறியிருக்கிறார். இது தம்பிதுரை, ஆளுங்கட்சியினரின் குரலாக இருக்கிறது. கலெக்டர் சொன்னது போல் 100 பேர் அவரது வீட்டிற்கு செல்ல வில்லை. வேட்பாளரால் அங்கீகாரம் செய்யப்பட்ட முகவர் செந்தில் உள்பட 10 பேர்தான் சென்றிருக்கிறார்கள். 100பேர் வந்திருப்பதாக சொல்லும் கலெக்டர், அவரது வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வெளியிட வேண்டும். அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #senthilbalaji #admk #TNElections2019 #mkstalin

    Next Story
    ×