search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பாலியல் புகார்- சமூக வலைத்தளத்தில் பரவும் அ.ம.மு.க. வேட்பாளரின் வீடியோ
    X

    பெண் பாலியல் புகார்- சமூக வலைத்தளத்தில் பரவும் அ.ம.மு.க. வேட்பாளரின் வீடியோ

    பெரியகுளம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #AMMK #Kathirkamu
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேனி அல்லிநகரத்தில் உள்ள தனது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணை மயக்கமடைய வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து தேனி அல்லி நகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் கதிர்காமு அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் சசிகலா அணிக்கு தாவினார். இதனையடுத்து இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பெரியகுளம் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக களத்தில் உள்ளார்.

    தற்போது கதிர்காமு மீது தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் 35 வயது மதிக்கத்தக்க தன்னை கதிர்காமு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.



    அதன் பேரில் கதிர்காமு மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு 4 ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் அளிப்பதன் காரணம் குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்தே தனக்கு உயிர் பாதுகாப்பு, மான பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே கதிர்காமு தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த காட்சியில் இருப்பது டாக்டர் கதிர்காமுதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து டாக்டர் கதிர்காமு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என் மீது அளிக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் யாரையும் மிரட்டியதும் இல்லை. இது போன்ற ஒரு சம்பவமும் நடக்கவும் இல்லை. இருந்தபோதும் இந்த பொய் வழக்கை சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றார். #AMMK #Kathirkamu
    Next Story
    ×