search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடிகளை அபகரிக்க பாமக திட்டம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
    X

    வாக்குச்சாவடிகளை அபகரிக்க பாமக திட்டம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

    வாக்குச்சாவடிகளை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர் என பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. #LSpolls2019 #PMK #AnbumaniRamadoss #DMK #EC
    சென்னை:

    திருப்போரூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    நமது கூட்டணி வலுவான கூட்டணி. நம் கூட்டணியில் ஏராளமான கட்சிகள் உள்ளன. நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எதிரணியில் உள்ள தி.மு.க. கூட்டணியில் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே உள்ளன.

    இருந்தாலும் என்ன, ஓட்டுப்போட அவர்கள் வாக்குச்சாவடிக்கு தானே வரவேண்டும். வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம், புரிகிறதா? என பேசினார்.

    இதே கருத்தை தொடர்ந்து 3 முறை புரிகிறதா? என கேட்டு, நாம் மட்டுமே இருக்கும்போது என்ன நடக்கும்? என்று குறிப்பிட்டார்.

    அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிக்கு செல்லும் வாக்குகளை செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதால் அவரது பேச்சுக்கு தி.மு.க. கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ளது.

    வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக தேர்தல் கமிஷனில் திமுக சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டு உள்ளது. #LSpolls2019 #PMK #AnbumaniRamadoss #DMK #EC
    Next Story
    ×