search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு
    X

    திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு

    கோவையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MKStalin #DMK #CaseFiled
    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில்  உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் வாகனத்தில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு,  மக்களவை தொகுதி  திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தினை ஆதரித்து  பேசியபோது, 'உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதிலும், வேலுமணி உள்ளாட்சி தேர்தலையே சரிவர நடத்த இயலவில்லை.



    அவருக்கு ஊழல் தான் நோக்கம். ஊழல் செய்வதில் அவர் தான் நம்பர் ஒன். ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே மிஞ்சியவர். தமிழகத்திற்கு ஊழலிலே முதலிடம் வாங்கிக்கொடுத்தவர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலுமணி மீது ஊழல் வழக்கு போடப்படும்' என கூறியிருந்தார்.

    இதையடுத்து அமைச்சர் வேலுமணி மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டியதாகவும், அவதூறாக பேசியதாகவும் தொண்டாமுத்தூர் போலீசார், திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MKStalin #DMK #CaseFiled 


    Next Story
    ×