search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியபோது எடுத்தபடம்.
    X
    ஈரோடு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியபோது எடுத்தபடம்.

    எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள்- சீமான்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று சீமான் பேசியுள்ளார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #Seeman
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    தேர்தலையொட்டி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் பறக்கும் படையா..? பறிக்கும் படையா?

    மளிகை கடை, ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களையெல்லாம் பிடிப்பார்கள். வியாபாரிகளை பிடிப்பார்கள். ஆனால் பணம் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளை மட்டும் பிடிக்க மாட்டார்கள். இவர்களை என்னவென்று சொல்ல? பறிக்கும் படை என்று தானே சொல்ல வேண்டும்?



    நம் நாடு எத்தனையோ தேர்தல்களை சந்தித்து உள்ளது. ஆனால் நாம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுதான் உண்மை. தி.மு.க.வுக்கு மாற்று.. அ.தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க... பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க இப்படிதானே இருக்கிறது? இதிலிருந்து ஒரு மாற்று ஏற்படதான் “நாம் தமிழர்” என்ற புதிய இயக்கத்தை... புதிய அரசியல் பாதையை ஏற்படுத்தி இருக்கிறோம்.

    இந்த இயக்கம் புரட்சிகர அரசியல் பாதை. அடிமைகளாக இருக்கும் மக்களின் அரசியல் பாதை... நமது அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான வாழ்க்கைபாதை வாருங்கள். இந்த பாதையில் பயணிப்போம்.. இழந்த உரிமையை மீட்டெடுப்போம். நம்மை ஆள இவர்கள் யார்?

    ஆட்சியாளர்கள் உங்களுக்கு கொடுக்கும் பணம் உங்கள் வறுமையை போக்கி விடுமா? பொங்கலுக்கு அந்த பக்கம் ரேசனில் ரூ.1000 கொடுக்கிறார்கள். இந்த பக்கம் டாஸ்மாக் கடையில் அதை வாங்கி கொள்கிறார்கள்.

    இப்போது அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளை நட்டு வைக்கிறார்கள். அவர்களை பார்த்து நான் கேட்கிறேன். தமிழகம் என்ன உங்கள் குடும்ப சொத்தா? எங்கள் பாட்டன்.. முப்பாட்டான் எல்லாம் உங்களிடம் இதையா கேட்டார்கள்? தலாய்லாமா தனி நாடு கேட்டால் ஆதரிக்கும் மத்திய அரசு.. பாகிஸ்தானை பிரித்து வங்காள தேசம் உருவாக்கிய இந்திய அரசு பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்திய அரசு நாம் தனி ஈழம் கேட்டால் மட்டும் எதிர்ப்பது என்னங்க நியாயம்? 50 ஆண்டுக்கு மேலாக ஆட்சி செய்து எதுவும் செய்யாத காங்கிரஸ் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறது? கடந்த 5 ஆண்டாக எதுவும் செய்யாத மோடி மீண்டும் பிரதமரானால் வரும் 5 ஆண்டுகளில் நாடே இருக்காது முடித்து விடுவார்.

    நான் உங்களிடம் ஓட்டு கேட்கப் போவதில்லை. எனக்கு ஓட்டுப்போட்டால் போடுங்கள்.. இல்லாவிட்டால் போங்கள்.. ஆனால் நாட்டுக்காக பேராட வேண்டியது எனது கடமை. அந்த கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்டின் மீது எனக்கு பேரன்பு உள்ளது.

    இவ்வாறு சீமான் பேசினார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #Seeman
    Next Story
    ×