search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுலின் வறுமை ஒழிப்பு திட்டம் ஏழைகளை வாழ வைக்கும் - கே.எஸ்.அழகிரி அறிக்கை
    X

    ராகுலின் வறுமை ஒழிப்பு திட்டம் ஏழைகளை வாழ வைக்கும் - கே.எஸ்.அழகிரி அறிக்கை

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்பு திட்டம் ஏழைகளை வாழ வைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்றினார். 2004 முதல் 2014 வரை நடைபெற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களால் 15 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து வெளியேற்றியதற்காக ஐ.நா. சபையே இந்தியாவிற்கு விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. இதை அத்வானியே பாராட்டியிருக்கிறார்.

    நரேந்திர மோடி அரசு வறுமை ஒழிப்பு முயற்சியில் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. இதிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பொறுப்பை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.

    இந்த திட்டத்தின்படி மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரான 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி மக்கள் பயனடைகிற வகையில் ஆண்டுக்கு ரூபாய் 72 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி தேவை என்றும், முதல் ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி தேவைப்படும் என ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

    நரேந்திர மோடி ஆட்சியில் 15 தொழிலதிபர்களுக்கு வங்கிகள் மூலமாக சலுகை அளிப்பதற்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். நரேந்திர மோடி குறிப்பிட்ட முதலாளிகளுக்காக சலுகை வழங்கியிருக்கிறார்.

    ஆனால் ராகுல்காந்தி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததோடு 25 கோடி மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்து வறுமைக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்.

    வறுமை ஒழிப்பு முயற்சியில் ராகுல்காந்தி வெற்றி பெறுவதற்கு பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு அளித்து ஒத்துழைப்பார்கள்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். #LokSabhaElections2019  #KSAlagiri
    Next Story
    ×