search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி விஜில் ஆப் மூலம் பணப்பட்டுவாடா குறித்து 76 புகைப்பட ஆதாரங்கள் - சத்யபிரத சாகு
    X

    சி விஜில் ஆப் மூலம் பணப்பட்டுவாடா குறித்து 76 புகைப்பட ஆதாரங்கள் - சத்யபிரத சாகு

    சி விஜில் ஆப் மூலம் பணப்பட்டுவாடா குறித்து 76 புகைப்பட ஆதாரங்கள் வந்துள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதாக 1011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை, திருப்பூர், தேனி, மதுரை மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.

    பொதுமக்கள் தேர்தல் கமி‌ஷனுக்கு புகார் அளிக்கக் கூடிய சி விஜில் செயலி (ஆப்) மூலம் 968 புகார்கள் வந்துள்ளன. அதில் 622 புகார்களுக்கு ஆதாரம் இல்லை. 314 புகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


    பணம் விநியோகம் சம்பந்தமாக 76 புகைப்பட ஆதாரங்கள் வந்துள்ளன. மதுபானங்கள் வழங்குவதாக 11 புகைப்படங்கள் வந்துள்ளன. இதுவரை வாகன சோதனையில் ரூ.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மதுமகாஜன் நாளை சென்னை வருகிறார். ஓட்டுரிமை இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஓட்டுபோட வேண்டுமானால் இங்கு வந்து தான் ஓட்டுபோட முடியும். வெளிநாட்டில் இருந்து கொண்டே ஓட்டு போட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    Next Story
    ×