search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டம் வளர்ச்சி அடையாததற்கு ஓபிஎஸ் தான் காரணம்- தங்க தமிழ்ச்செல்வன்
    X

    தேனி மாவட்டம் வளர்ச்சி அடையாததற்கு ஓபிஎஸ் தான் காரணம்- தங்க தமிழ்ச்செல்வன்

    தேனி மாவட்டம் வளர்ச்சி அடையாததற்கு ஓ.பி.எஸ்.தான் காரணம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #LSPolls #ThangaTamilselvan #OPS
    ஆண்டிப்பட்டி:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். அவரிடம் 10-க்கும் மேற்பட்ட துறைகள் இருந்தன. அவ்வாறு இருந்தபோதும் தேனி மாவட்டத்துக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நான் சட்டமன்றத்தில் மாவட்டத்துக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல முறை பேசியுள்ளேன். ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்த கூடிய இடத்தில் இருந்த பன்னீர் செல்வம் தொடர்ந்து தேனி மாவட்டத்தையும், ஆண்டிப்பட்டி தொகுதியையும் புறக்கணித்து வந்துள்ளார். தேனி மாவட்டம் வளர்ச்சி அடையாததற்கு ஓ.பி.எஸ்.தான் காரணம்.



    இதுவரை தேனி மாவட்டத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாத ஓ.பி.எஸ். தற்போது தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வருகிறார். ஓ.பி.எஸ்.க்கும் அவரது மகனுக்கும் தொகுதி மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    எங்களுக்கு சின்னம் கிடைக்காவிட்டாலும் தனித்தனியாக ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிட்டு மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    தமிழகத்தில் அ.ம.மு.க.வுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. தற்போது அ.ம.மு.க. பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. இன்றைய அரசியல் களத்தில் புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேரும் பொது மக்கள் ஆதரவும் எங்களுக்கு உள்ளது.

    மக்களவை தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடன் இத்தொகுதியில் நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ThangaTamilselvan #OPS
    Next Story
    ×