search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்
    X

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்

    தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் இன்று திடீரென மாற்றப்பட்டுள்ளார். #ADMKCandidate #PeriyakulamCandidate
    தேனி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடங்கினார்.

    இந்நிலையில் பெரியகுளம் தொகுதி வேட்பாளரை அதிமுக தலைமை திடீரென மாற்றி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில், “அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18-4-2019 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்குப் பதிலாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, அல்லி நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.மயில்வேல் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

    முருகன்

    வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முருகன், ஓ.பி.எஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முருகன் மீது கட்சி பிரமுகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. #ADMKCandidate #PeriyakulamCandidate
    Next Story
    ×