search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரும்பு விவசாயி சின்னத்தை சீமான் அறிமுகப்படுத்திய காட்சி.
    X
    கரும்பு விவசாயி சின்னத்தை சீமான் அறிமுகப்படுத்திய காட்சி.

    23-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுகம் - கரும்பு விவசாயி சின்னத்தை சீமான் வெளியிட்டார்

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை அறிமுகப்படுத்திய சீமான், 23-ந்தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நடைபெறுவதாக கூறினார். #LSPolls #Seeman
    சென்னை:

    நாம் தமிழர் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. எங்கள் கட்சியில் தான் வரலாற்று நிகழ்வாக பெண்களுக்கு சரிநிகர் சமமாக 50 சதவீத இடங்களை ஒதுக்கி கொடுத்துள்ளோம். 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயி சின்னத்தை சிறந்த சின்னமாக கருதுகிறோம். தமிழகம் உள்பட புதுவையில் எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.



    23-ந்தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் நான் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் அதுபோன்று கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.

    பா.ஜனதா கட்சி பாகிஸ்தானுடனான உறவை அரசியல் ஆக்குகிறது. இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை வைத்தும், அந்த கட்சி அரசியல் செய்கிறது.

    இவ்வாறு சீமான் கூறினார்.  #LSPolls #Seeman



    Next Story
    ×