search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல் காந்தி புதிய வியூகம்
    X

    தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல் காந்தி புதிய வியூகம்

    தமிழக பாராளுமன்ற தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி தொண்டர்களிடம் நேரடியாக கருத்து கேட்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். #LSPolls #Congress #RahulGandhi #ShaktiApp
    சென்னை:

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி தொண்டர்களிடம் நேரடியாக கருத்து கேட்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.

    இதற்கு அவர் காங்கிரசின் சக்தி திட்டத்தின் மூலம் நவீன முறையில் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குரலில் உங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கேட்பது போன்ற குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த குரல் பதிவு சக்தி திட்டத்தில் இணைந்துள்ள அனைவரது போன்களுக்கும் அனுப்பப்படுகிறது. அதைக் கேட்டு உங்கள் தொகுதியில் இவரை வேட்பாளராக போடுங்கள் என்று தொண்டர்கள் பதிவு செய்யும் வேட்பாளர் பெயர் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக பதிவாகிறது.

    அந்த பட்டியலை தமிழக காங்கிரஸ் ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பும் பட்டியலுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் தகுதியான வேட்பாளரை ராகுல் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.



    தற்போது சக்தி திட்டத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இணைந்துள்ள தொண்டர்கள் எண்ணிக்கை வருமாறு:-

    திருவள்ளூர் பத்தாயிரத்து 64, கன்னியாகுமரி 38 ஆயிரத்து 298, ஆரணி 11 ஆயிரத்து 451, சிவகங்கை ஒன்பதாயிரத்து 979, கிருஷ்ணகிரி 5 ஆயிரத்து 564, தேனி 5 ஆயிரத்து 225, கரூர் நாலாயிரத்து 820, விருதுநகர் மூவாயிரத்து 603, திருச்சி 9 ஆயிரத்து தொள்ளாயிரத்து 53.

    இவர்கள் அனைவரிடமும் போன் மூலம் கருத்து கேட்கப்படுகிறது. முதல் முறையாக இந்த புதிய முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது. #LSPolls #Congress #RahulGandhi #ShaktiApp
    Next Story
    ×