search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி- செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா ஆவேசம்
    X

    திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி- செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா ஆவேசம்

    திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசினார். #Premalatha #DMDK
    சென்னை:

    சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உலக மகளிர் தினத்தையொட்டி அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    கூட்டணி தொடர்பாக தலைமைக் கழகத்தில் இருந்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்த விவகாரத்தை தொடர்ந்து, கூட்டணியில் குழப்பம் நீடிப்பதாக செய்தி வெளியானது. கூட்டணியில் இழுபறியும் இல்லை குழப்பமும் இல்லை. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு, தலைமைக் கழகம் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.



    மூத்த அரசியல் தலைவரான திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்திக்க சென்றது தொடர்பாக சுதீஷ் முன்னிலையில் இருவரும் விளக்கம் அளித்துவிட்டனர். மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு வீட்டிற்கு வந்தவர்களை இப்படித்தான் அவமானப்படுத்துவதா?

    துரைமுருகனை சந்திப்பதற்காக இருவரும் உள்ளே போகும்போது மீடியாக்கள் அங்கு இல்லை, வெளியே வரும்போது எப்படி வந்தது?  எனவே, அரசியல் ரீதியாக தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தில் இதை திமுக கையாண்டிருக்கிறது. சாதாரணமான விவகாரத்தை சூழ்ச்சி மூலம் இதை திமுக பூதாகரமாக்கிவிட்டது. ஆரம்ப காலத்தில் இருந்தே திமுக என்கிற கட்சிக்கான விளக்கத்தை நான் தெளிவாகி பதிவு செய்து வருகிறேன். திமுக என்றால் ‘தில்லு முல்லு கட்சி’ தான் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.

    தன்னை சந்திக்க வந்தவர்களை முதலில் தெரியும் என்றார். அதன்பின்னர் தெரியாது என்கிறார். தெரியாத நபர்களை எப்படி உள்ளே விடுவார்? இப்படி கீழ்த்தரமான அரசியலை அவர் செய்வார் என எதிர்பார்க்கவில்லை.

    ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி தொடர்பாக எழுப்பப்படும் கேள்வியே தவறு. ஒரு வீட்டில் மணப்பெண் இருந்தால் 10 பேர் பெண் கேட்டு வரத்தான் செய்வார்கள். அதேபோல் தான் தேர்தலும். கூட்டணிக்காக கட்சிகள் வரும்.

    எங்கள் தலைவர் விஜயகாந்தை சந்தித்தபோது அரசியல் பேசவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் சொல்ல வேண்டும். கலைஞர் உடல்நலம் இல்லாதபோது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார்; ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. தேமுதிகவின் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Premalatha #DMDK

    Next Story
    ×