search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமக வேட்பாளர்கள் பட்டியல்- தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டி?
    X

    பாமக வேட்பாளர்கள் பட்டியல்- தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டி?

    அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக உள்ள தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. #LSPolls #PMK #SowmiyaAnbumani
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிக்கல் எதுவும் இல்லாமல் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால் பா.ம.க.வினர் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டனர். எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிடாவிட்டாலும் தலைவர்கள் மட்டத்தில் ஓரளவு முடிவு செய்து விட்டனர்.

    அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரடியாகவே அழைத்து விசாரித்து வருகிறார்.



    தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி தற்போது எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறை சவுமியா அன்புமணி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. சவுமியா அன்புமணி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் ‘பசுமைத் தாயகம்’ என்ற அமைப்பின் மூலம் எல்லா பகுதியிலும் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், அரக்கோணம், விழுப்புரம், கடலூர் ஆகிய 6 தொகுதிகளும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

    முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே.மூர்த்தி தொடர்ந்து 2 முறை செங்கல்பட்டு தொகுதி எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு ஆரணியிலும், ஸ்ரீபெரும்புதூரிலும் போட்டியிட்டு வெற்றிப் பெறவில்லை.

    இந்த முறை அரக்கோணம் தொகுதியில் களமிறக்கப்படுகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர், வைத்திலிங்கம், திண்டுக்கல் தொகுதிக்கு திலகபாமா, விழுப்புரத்துக்கு வடிவேல் ராவணன், கடலூருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மத்திய சென்னைக்கு இரா.சகாதேவன், ஜான்பால் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

    வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் இவர்களிடம் அந்தந்த தொகுதிகளில் எதிரணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் செல்வாக்கு, பணபலம் ஆகியவை பற்றி ராமதாஸ் விசாரித்து வருகிறார். #LSPolls #PMK #SowmiyaAnbumani
    Next Story
    ×