search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் - 21 சட்டசபை தொகுதி: திமுக வேட்பாளர்கள் 11ந்தேதி அறிவிப்பு
    X

    பாராளுமன்றம் - 21 சட்டசபை தொகுதி: திமுக வேட்பாளர்கள் 11ந்தேதி அறிவிப்பு

    20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர்கள் 11-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #DMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து விட்டன. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இதையடுத்து தி.மு.க.வில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இன்று மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

    இதையடுத்து தி.மு.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் நாளை (9-ந்தேதி)யும், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் 10-ந்தேதியும் நேர்காணல் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார்.



    இதையடுத்து 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர்கள் 11-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. சார்பில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர்கள் விவரம் வருமாறு:-

    1. கனிமொழி - தூத்துக்குடி

    2. தயாநிதி மாறன்- மத்திய சென்னை

    3. டி.ஆர்.பாலு- ஸ்ரீபெரும்புதூர்

    4. ஆ.ராசா-நீலகிரி

    5. தமிழச்சி தங்கபாண்டியன்- தென்சென்னை

    6. துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்-வேலூர்

    7. ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி- வடசென்னை

    8. பொன்முடி மகன் கவுதம் சிகாமணி- கள்ளக்குறிச்சி

    9. எ.வ.வேலு மகன் கம்பன்- திருவண்ணாமலை. #ParliamentElection #DMK

    Next Story
    ×