search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்- தி.மு.க.வினர் விருப்பமனு தாக்கல் தொடங்கியது
    X

    பாராளுமன்ற தேர்தல்- தி.மு.க.வினர் விருப்பமனு தாக்கல் தொடங்கியது

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். #DMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுக்கலாம் என்று கட்சியின் தலைமை அறிவித்தது. கடந்த ஒரு வாரமாக இதற்கான மனுக்கள் அறிவாலயத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதற்கான மனு ரூ.1000 செலுத்தி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் செய்யும் போது ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 562 பேர் விண்ணப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளான இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். ஒவ்வொரு மனுவுக்கும் ரூ.25 ஆயிரம் வீதம் செலுத்தப்பட்டது.

    மனுக்களை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை கழக நிர்வாகி துறைமுகம் காஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இன்று மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, சரவணன், தளபதி ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர். அன்பு செழியன், தண்டபாணி ஆகியோர் கோவை தொகுதிக்கும், ராசையா தென்காசி தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்தனர்.

    உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சந்திரபாபு கொடுத்தார். விருதுநகர் தொகுதிக்கு தளபதி மகன் துரைதயாநிதி, மகள் மேகலை ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    தென் சென்னையில் போட்டியிட கவிஞர் காசி முத்துமாணிக்கம் மனு கொடுத்தார். பொள்ளாச்சி தொகுதிக்கு வக்கீல் மனோகரன், வரதராஜன் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர். தொடர்ந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. வருகிற 7-ந்தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம். #DMK
    Next Story
    ×