திருவள்ளூரில் அரசு உத்தரவை மீறி வாகனங்களில் பொருத்திய பம்பர் கம்பிகள் அகற்றம்

திருவள்ளூரில் அரசு உத்தரவை மீறி வாகனங்களில் பொருத்திய பம்பர் கம்பிகள் அகற்றிய அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 741 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 741 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 262 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருநின்றவூரில் பழங்குடியினருடன் கல்லூரி மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கல்பேடு அருகில் பழங்குடிகளான இருளர் இன மக்களுடன் புத்தாண்டை கொண்டாடினர்.
செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண் பார்வை பறிபோனது- கணவர் கைது

குடும்ப தகராறில் செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண் பார்வை பறிபோனது. இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 41 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருமுல்லைவாயல் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி

திருமுல்லைவாயல் அருகே, வீட்டின் குளியல் அறையில் வெந்நீர் போடுவதற்காக ‘ஹீட்டர் சுவிட்ச்சை’ போட்டபோது மின்சாரம் தாக்கி மனைவியும், அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தண்டவாளத்தில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
பெற்ற மகனை கொல்ல முயன்ற தாய் கைது

ஸ்ரீபெரும்புதூரில் பெற்ற மகனை கொல்ல முயன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

கள்ளக்காதலனின் மனைவியை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் குடியிருப்பில் நிறுத்தப்பட்ட அவரது மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த பெண் கைது செய்யப்பட்டார்.
பூனைக்கு சீர்வரிசைகளுடன் வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்

பூனைக்கு சீர்வரிசைகளுடன் வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர், தனது பிள்ளைகள் போல பாவித்து வளர்க்கும் செல்லப்பிராணிக்கு வளைகாப்பு நடத்தி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் 5 பேர் கைது

கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே தி.மு.க. பிரமுகரை கொலை செய்ய முயற்சி - 4 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

காரில் வந்த தி.மு.க.பிரமுகரை 4 பேரை கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து பட்டாகத்தியால் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.
மோட்டார் சைக்கிள்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல் - மீன் வியாபாரி பலி

பேரம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக பலியானார்.
ஆவடி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்

ஆவடி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை

திருவள்ளூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியபோது வடமாநில மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிப்பட்டு அருகே லாரிகளுக்கு இடையே சிக்கி அப்பளமாக நொறுங்கிய கார் - 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பள்ளிப்பட்டு அருகே இரு கரும்பு லாரிகளுக்கு இடையே சிக்கிய கார் அப்பளம் போல் நசுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவள்ளூர் அருகே ஏரியில் குளித்த போது தனியார் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர் அருகே ஏரியில் குளித்த போது, தனியார் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பலியானார். மாயமான அவரது நண்பரை தேடும் பணி நடைபெறுகிறது.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தற்காலிக சாலை அமைப்பு

ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.