திருவையாறு அருகே லாரி டிரைவர் கொலை- போலீசார் விசாரணை

திருவையாறு அருகே லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதாக்கோட்டை, திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

மாதாக்கோட்டை, திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி- போலீசார் விசாரணை

தனியார் நிதி நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

தஞ்சை அருகே இருதரப்பினரிடையே நடந்த மோதலில் ஊராட்சி மன்ற தலைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மழைநீர் வடியாததால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து அழுகி நாசம்

நாஞ்சிக்கோட்டை பகுதியில் மழைநீர் வடியாததால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து, எள் பயிர்கள் அழுகி நாசமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் திறப்புக்கு தயாராகும் பள்ளிகள்

தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளை திறக்கப்படுவதை முன்னிட்டு வகுப்பறைகளை தூய்மை படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி அருகே மதுவிற்ற பெண் உள்பட 4 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே மதுவிற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோவிலில் 100 கிலோ காய்- கனிகளால் நந்திக்கு அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி தலா 100 கிலோ காய்-கனிகளால் எளிய முறையில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி- வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்

மின்கம்பியில் பஸ் உரசியதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்.
பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைக்க கலெக்டர் அறிவுரை

தஞ்சை மாவட்டத்தில் 19-ந்தேதி 438 பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சை அருகே கனமழையால் ஏரிக்கரை உடைப்பு- 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சை அருகே பெய்த கனமழை காரணமாக சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
பட்டுக்கோட்டை அருகே தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து தாய்-மகள் பலி

பட்டுக்கோட்டை அடுத்த வீரக்குறிச்சி கிராமத்தில் தொடர் மழை காரணமாக வீட்டு சுவர் இந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த தாய்-மகள் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.
தஞ்சை அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது

கள்ளப்பெரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் உத்தரவு

தனியார் பேருந்து மின்கம்பியின் மீது உரசி விபத்துக்குள்ளானதில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சையில் மீண்டும் துயரம்- மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

தஞ்சை பட்டுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா- கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் வெட்டிக்கொலை- உறவினர் கைது

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா

கும்பகோணம் அருகே 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சை அருகே சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.