மகுடஞ்சாவடி அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாழப்பாடி அருகே கார் மோதி கூலித்தொழிலாளி பலி

வாழப்பாடி அருகே கார் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மருத்துவர்கள் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டதால் கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் படிப்படியாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தலைவாசல் அருகே அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
சேலம் மாவட்டத்தில் 100 அம்மா மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

சேலம் மாவட்டத்தில் விரைவில் 100 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில் கைதி மரணம்- மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
சங்ககிரி அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

சங்ககிரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை

ஆத்தூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 34 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி 4 நாட்கள் சுற்றுப்பயணம்

சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை மினி கிளினிக்கை அவர் திறந்து வைக்கிறார்.
சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
அம்மாபேட்டையில் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - சக்திவேல் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அனைத்து வேளாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் - மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது

வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வேளாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.100¼ கோடியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரம் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.100¼ கோடியில் நடைபெற்று வரும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், மாநகர பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொண்டலாம்பட்டியில் பேக்கரி கடைக்காரரிடம் வழிப்பறி - வாலிபர் கைது

கொண்டலாம்பட்டியில் பேக்கரி கடைக்காரரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராமன் தகவல்

பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 5 ஆயிரத்து 131 கனஅடியாக குறைந்து உள்ளது.
சேலம் அருகே விருதுநகர் வட்டார போக்குவரத்து பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சேலம் அருகே விருதுநகர் வட்டார போக்குவரத்து பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சேலத்தில் போலீஸ் தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் லாரி மோதி பலி

சேலத்தில் போலீஸ் தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 40 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது.