சொகுசு பஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

சேலம் அருகே தனியார் சொகுசு பஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக வந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் வெங்காய குடோன்களில் போலீசார் சோதனை

குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து நேற்று காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
திருமணம் செய்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருமணம் செய்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் அருகே விபத்து: கல்லூரி மாணவர்- புகைப்பட கலைஞர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர், புகைப்பட கலைஞர் ஆகியோர் விபத்தில் சிக்கி பலியாகினர்.
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை உபரிநீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்கள்- அதிகாரிகள் விசாரணை

மேட்டூர் அணை உபரிநீர் போக்கி கால்வாயில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல் உள்ளதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் அருகே கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

சேலம் அருகே நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு - போலி டாக்டர் வீட்டிற்கு சீல் வைப்பு

சேலத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி டாக்டர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
ஆத்தூர் அருகே விவசாயியை தாக்கி ரூ.55 லட்சம் வழிப்பறி

ஆத்தூர் அருகே இன்று விவசாயியை தாக்கி ரூ.55 லட்சத்தை 6 பேர் கும்பல் வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பைவிட வரத்து கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 120 அடியாக தொடர்நது நீடித்து வருகிறது.
ஜவ்வரிசி ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜவ்வரிசி ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலியானார். மேலும் 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை நீடிப்பு

சேலம் மாவட்டத்தில் இன்று 2வது நாளாக காலையும் மழை நீடித்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கால்வாயில் 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
பெண் குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு விற்ற பெற்றோர்

சேலம் அருகே பிறந்த பெண் குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு பெற்றோர் விற்பனை செய்த தகவலறிந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து எச்சரித்து அனுப்பினர்.
பெற்றோர் திட்டியதால் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சேலம் அருகே பெற்றோர் திட்டியதால் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 943 கன அடி

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.