அமைச்சர் பாண்டியராஜனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்- சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேட்டி

மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
மார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் பெண் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நித்திரவிளை அருகே வீடு புகுந்து ரூ.88 ஆயிரம் திருட்டு

நித்திரவிளை அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் வீடு புகுந்து ரூ.88 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.
இரணியல் அருகே கோழி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேர் கைது

இரணியல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோழி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேரை கைது செய்தனர்.
கொல்லங்கோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 1 1/2 பவுன் நகை பறிப்பு

கொல்லங்கோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 1 1/2 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பறித்து சென்றனர்.
குளச்சலில் கடையில் பூட்டை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு

குளச்சல் மெயின் ரோட்டில் கடையில் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஈத்தாமொழி அருகே இளம்பெண் மாயம்

ஈத்தாமொழி அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து சமத்துவமக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

குமரியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து சமத்துவமக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் நடந்தது.
பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பாவிட்டால் மறியல் போராட்டம்- ஆஸ்டின் எம்எல்ஏ

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பாவிட்டால் திமுக சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை

திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற 10-ம் வகுப்பு மாணவர் பலி

தக்கலை அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற 10-ம்வகுப்பு மாணவர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
அ.ம.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் நீக்கம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் இருவரையும் நீக்கம் செய்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
40 அடியை எட்டும் பேச்சிப்பாறை அணை- விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை ரஜினியால் மட்டுமே தரமுடியும்-தமிழருவி மணியன் சொல்கிறார்

தமிழகத்தில் ஊழலற்ற மக்கள் விரும்பும் ஆட்சியை ரஜினியால் மட்டுமே தரமுடியும் என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார்.
கொல்லங்கோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

கொல்லங்கோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்

கருங்கல் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரைபுரண்டோடிய வெள்ளத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ்

பேச்சிப்பாறை, குற்றியாறு தரைப்பாலத்தில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் பயணிகளுடன் அரசு பஸ் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தோவாளை மார்க்கெட்டில் இன்று மல்லிப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

தோவாளை மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக இன்று ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை ரூ. 3 ஆயிரமாக உயர்ந்தது.
குமரியில் மழையால் 225 வீடுகள் இடிந்தன

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் இதுவரை 225 வீடுகள் இடிந்து சேதமடைந்து உள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மதம் மாறி 2 பெண்களை திருமணம் செய்த என்ஜினீயர் கைது

முதல் மனைவியை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்த குமரி என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இவர் 2 பெண்களையும் மணப்பதற்காக கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆரல்வாய்மொழி அருகே விபத்து- 2 கல்லூரி மாணவர்கள் காயம்

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது அரசு பஸ் மோதிய விபத்து 2 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்.