மு.க.ஸ்டாலின் வேல் எடுத்து பிரசாரம் செய்வது ஏமாற்று நாடகம்- எல் முருகன் பேட்டி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் எடுத்து பிரசாரம் செய்வது மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்று பழனியில் மயில்காவடி எடுத்து ஆடிய தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கூறினார்.
பழனியில் தைப்பூச திருவிழா- பாதுகாப்புக்கு வந்த போலீசுக்கு கொரோனா

பழனி கோவில் தைப்பூச திருவிழா பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு 10 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது

பழனி முருகன் கோவிலில் 10 மாதங்களுக்கு பிறகு, தைப்பூச திருவிழாவையொட்டி தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே ஆசிரியர்கள் ஏலச்சீட்டு நடத்தி ரூ.47 லட்சம் மோசடி - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்

திண்டுக்கல் அருகே, ஆசிரியர்கள் ஏலச்சீட்டு நடத்தி ரூ.47 லட்சம் வரை மோசடி செய்தனர் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
வாக்காளர் பட்டியலில் இந்தி எழுத்துக்கள் திமுக புகார்

ஆத்தூர், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக கலெக்டரிடம், தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தைப்பூசம், வார விடுமுறையையொட்டி பழனி கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில், தைப்பூசம் மற்றும் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நீச்சல் பழகியபோது குளத்தில் மூழ்கி 3 பேர் பலி

திண்டுக்கல் அருகே நீச்சல் பழகியபோது குளத்தில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையைெயாட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பால் தினகரனுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் அரசியல் இல்லை- பாஜக மாநில பொதுச்செயலாளர் பேட்டி

கிறிஸ்தவ மதபோதகர் பால்தினகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது அரசியல் தலையீடு இல்லை என்று பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.
பெண் கொலை வழக்கில் அண்ணன்-தங்கைக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்லில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தங்கைக்கு மகிளா கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
பழனி அருகே ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு -பள்ளிக்கூடம் மூடல்

பழனி அருகே பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் பணியாற்றிய பள்ளிக்கூடம் மூடப்பட்டது.
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள், 20 பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு உடனடியாக பரிசோதனையை மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

திண்டுக்கல் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் 5 பவுன் நகையை 2 பேர் பறித்து சென்றனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது

கொடைக்கானலில் வருகிற 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி சென்ற சுற்றுலா பயணியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி சென்ற சுற்றுலா பயணியிடம் 7 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி கோவிலில் இன்று தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.