நாமக்கல்லில் ஆவின் பாலக விற்பனையாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது

நாமக்கல்லில் ஆவின் பாலக விற்பனையாளரின் வீட்டில் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்லில் 60 கிலோ கஞ்சாவுடன் கார் பறிமுதல்

நாமக்கல்லில் வாகன சோதனையின் போது 60 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காரில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை- திருட வந்த ஆசாமிகள் வெறிச்செயல்

நாமக்கல் அருகே, கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். திருட வந்த இடத்தில் மர்ம ஆசாமிகள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் - குஷ்பு

பாராளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Parliamentelection #DMK #Congress #Kushboo
பிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது - ஈவிகேஎஸ் இளங்கோவன்

பிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது, என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். #EVKSElangovan #PriyankaGandhi #PMModi
புதுச்சத்திரம் அருகே வங்கி காசாளர் மர்ம மரணம்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே வங்கி காசாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவியை கடத்தி திருமணம்: பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை

நாமக்கல்லில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.
நாமக்கல் போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் மாயம்

நாமக்கல் போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani #Summer
நாமக்கல், சேந்தமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவல்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மலர்விழிக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காதலியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் எரித்துக்கொலை - உறவினர்கள் வெறிச்செயல்

நாமக்கல் அருகே காதலியுடன் குடும்பம் நடத்திய வாலிபரை பெண்ணின் உறவினர்கள் எரித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூரில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மோகனூர் அருகே பஸ்-மினிலாரி மோதல்- 2 பேர் படுகாயம்

மோகனூர் அருகே பஸ்-மினிலாரி மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 2 ஆயிரம் முட்டைகள் சேதம் அடைந்துள்ள்து.
நாமக்கல்லில் லாரி அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

நாமக்கல்லில் லாரி அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் தவறி விழுந்து மரணம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் பலகையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரியபெருமாள்புதூரில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்- கலெக்டர் ஆய்வு

கரியபெருமாள்புதூரில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #jallikattu
வாக்காளர் பட்டியலில் விவரங்களை அறிய செயலியை பயன்படுத்தலாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை அறிய செயலியை பயன்படுத்தலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை சரிவு

பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை சரிவடைந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க வெற்றி பெறும்- டிடிவி தினகரன் பேச்சு

பரமத்தியில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தினகரன், எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறும் என்று கூறினார். #ttvdinakaran