search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது
    X

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது

    நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
    சென்னை :

    தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக உயர்ந்து கொண்டே இருந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை அதிகளவில் உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.528 அதிகரித்து இருந்தது. கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கம் விலை நேற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 142-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 136-க்கும் விற்பனை ஆனது.

    நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.31-ம், பவுனுக்கு ரூ.248-ம் அதிரடியாக குறைந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 111-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 888-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்துக்கு கீழ் மீண்டும் சென்றது.



    தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று குறைந்து இருந்தது. கிராமுக்கு 40 காசும், கிலோவுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் 39 ரூபாய் 90 காசுக்கும், ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.

    தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலையில் திடீர் குறைவு ஏன்? என்பது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, ‘அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாலும் தங்கம் விலை குறைந்து இருக்கிறது. இதே நிலை நீடிக்காது. மீண்டும் தங்கம் விலை உயருவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது’ என்றார்.
    Next Story
    ×