search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளங்கோவன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்- ரவீந்திர நாத்குமார்
    X

    இளங்கோவன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்- ரவீந்திர நாத்குமார்

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார் என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் கூறினார்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி பராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் இன்று ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.

    பின்னர் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து தனக்கு வாக்களித்தமைக்காக நன்றியை தெரிவித்துக் கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் நான் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். குறிப்பாக மதுரை - போடி அகல ரெயில் பாதை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த பணியை துரிதப்படுத்தி விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தி போராடுவேன்.

    மேலும் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் வேலை வாய்ப்பு பிரச்சனை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும்.


    நான் வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது மக்கள் அளித்த தீர்ப்பு. அதற்கு நான் தலை வணங்குகிறேன். தோல்வியடைந்ததால் எதையும் பேசி விடலாம் என நினைக்க கூடாது. ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்கள் என்னை தேனி தொகுதியில் அதிக அளவு வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். எனவே எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயாராகவே இருக்கிறேன்.

    மத்திய அமைச்சர் பதவி என்பது மக்கள் பணி செய்வதற்காகவே. அது பெரிய வி‌ஷயமல்ல. அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மக்களுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×