search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி பிறந்த நாள்- சென்னையில் நாளை திமுக சார்பில் 3 நிகழ்ச்சிகள்
    X

    கருணாநிதி பிறந்த நாள்- சென்னையில் நாளை திமுக சார்பில் 3 நிகழ்ச்சிகள்

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னையில் நாளை தி.மு.க. சார்பில் 3 நிகழ்ச்சி கள் நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் தி.மு.க. போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க. பிடித்துள்ளது.

    22 சட்டசபை இடைத் தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 101 ஆக உயர்ந்துள்ளது.

    வருகிற 17-ந்தேதி பாராளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதுபோல் தமிழக சட்டசபை கூட்டத் தொடரும் இந்த மாதம் 3-வது வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் தி.மு.க. எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் அணு குமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    முன்னதாக அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

    விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்புரையாற்றுகிறார்.

    இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் ஜவாஹிருல்லா, பாரிவேந்தர், ஈஸ்வரன், சுப.வீரபாண்டியன், ஸ்ரீதர் வாண்டையார், இனிகோ இருதயராஜ், எர்ணாவூர் நாராயணன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×