search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்புணரியில் குளம் மற்றும் கண்மாய்களில் தூர்வாரும் பணி
    X

    சிங்கம்புணரியில் குளம் மற்றும் கண்மாய்களில் தூர்வாரும் பணி

    சிங்கம்புணரி பகுதியில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களை அகலம் மற்றும் ஆழம்படுத்தி தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சிங்கம்புணரி:

    ஆறு, ஏரி மற்றும் குளம் கண்மாய்களை தூர் வாரும் பணி கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின்படி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சிங்கம்புணரி பகுதியில் உள்ள பாலாறு மற்றும் உப்பாறு பகுதியில் கருவேல மரங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சிங்கம்புணரி பகுதியில் உள்ள தூர்ந்து போன 9 குளங்கள் மற்றும் கண்மாய்களை அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும், வரும் காலங்களில் மழை நீரை சேகரிக்க தயார் செய்யப்படுகிறது.

    இந்தபணியில் 9 ஜே.சி.பி. எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, அவற்றின் மூலம் தூர்வாரும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், குளங்கள், கண்மாய்கள் தூர்ந்து போயிருக்கும் நிலையில் வரும் காலங்களில் மழை நீரை சேமிக்கவும் மனிதர்கள், ஆடு மாடுகளுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் நிகழ்வாக முன் எச்சரிக்கையாக இந்த பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

    இதுகுறித்து பேரூராட்சி அலுவலர் கூறுகையில், கலெக்டரின் தனி கவனத்திற்குட்பட்ட குடிநீர் பிரச்சினை மூலம், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மழை நீரை சேகரிக்க, பேரூராட்சிக்குட்பட்ட 9 குளம் மற்றும் கண்மாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி சிங்கம்புணரி ஊராட்சிகள் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினர்.

    தூர்வாரும் பணி நடைபெற்று தண்ணீர் தேக்கப்பட்டால், விவசாயப் பணிகள் விறுவிறுப்படையும், மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த பணி செயல்படுத்தப்படுவதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
    Next Story
    ×