search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரைவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது- முத்தரசன்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரைவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது- முத்தரசன்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரைவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தஞ்சை மாவட்டத்தில் வருகிற 4-ம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் வழங்கி இருந்தார். அதற்கு தஞ்சாவூர் நகர டி.எஸ்.பி. 18 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இது இதுவரை இல்லாத நடைமுறையாகும். ஒன்று அனுமதி மறுக்கப்படுகிறது இல்லையென்றால் அனுமதிக்கப்படும் என்று தான் சொல்வார்கள். இப்போது டிஎஸ்பி கொடுத்துள்ள நோட்டீஸ் என்பது அவருடைய தன்னிச்சையான உத்தரவா? அல்லது அரசின் உத்தரவா? என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

    வரும் 4-ந்தேதி கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். அன்று மாலை விழுப்புரத்தில் நடைபெறும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளேன்.

    ஹைட்ரோ கார்பன் போராட்டம் என்பது ஜனநாயக ரீதியில் உணர்வு பூர்வமாக நடைபெறும் போராட்டம் இதில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தினந்தோறும் ஏதாவது ஒரு கிராமத்தில் விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். தேர்தலுக்கு பிறகு தமிழக அரசு இந்த திட்டத்துதை விரைவுபடுத்துவதுவதை வன்மையாக கண்டிக்கிறோம் 8 வழி சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக 5 மாவட்ட விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. எனவே மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது தமிழக அரசு இதற்கு துணை போகக் கூடாது.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையிலேயே இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது நம் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் பல மொழிகள் பேசுபவர்கள் இருந்தாலும் ஏற்கனவே ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது நாடு முழுவதும் இந்தி கொண்டுவர முயற்சித்தார். 1965-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இதற்காக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பல மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தி மொழியை திரும்பப் பெறுவதாக ஜவகர்லால் நேரு அப்போது அறிவித்தார். தற்போது மோடி அரசு இதே நிலையை கடைபிடித்தால் 1965 நடைபெற்ற போராட்டம் போல மீண்டும் போராட்டம் நடத்துவோம்.

    சமூக செயல் பாட்டாளர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க முடியாமல் தமிழக அரசு அவர்களை முடக்கி வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குறுந்தகடு வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமாகி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது அவர் உயிரோடு இருக்கிறாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என்பது குறித்து தமிழக முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் இது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.

    தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விவசாய பணிகள் பாதிக்கப் பட்டுள்ளதால் விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை ஏற்படுகிறது எனவே விவசாய தொழிலாளர்களுக்கு ஏதுவாக 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 எம்பிக்களும் காவிரி நீர், நீட் தேர்வு மற்றும் தமிழக உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×