search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏறுமுகம் - வாகன ஓட்டிகள் கலக்கம்
    X

    பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏறுமுகம் - வாகன ஓட்டிகள் கலக்கம்

    தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி ஒவ்வெரு நாளும் பெட்ரோல்- டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வருகிறது.

    கடந்த மாதம் பெட்ரோல்-டீசல் விலை ஒருநாள் குறைவதும், மறுநாள் உயருவதுமாக இருந்தது. 1-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.90-க் கும், டீசல் ரூ.70.44-க்கும் விற்பனை ஆனது. 5-ந்தேதி வரை ஏற்ற, இறக்க நிலையே நீடித்தது.

    இந்நிலையில் 5-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை இறங்குமுகத்தை சந்தித்தது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைந்து கொண்டே வந்தது. இது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை நீடித்தது. 16-ந்தேதி வரை பெட்ரோல் விலை ரூ.2.04-ம், டீசல் விலை 80 காசும் குறைந்தது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கி இருக்கிறது. 17-ந்தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.74.40-க் கும், டீசல் ரூ.70.45-க்கும் விற்பனை ஆனது. நேற்று லிட்டருக்கு 11 காசு உயர்ந்து பெட்ரோல் ரூ.74.51-க்கு விற்பனை ஆனது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. அந்தவகையில் 16-ந்தேதி முதல் பெட்ரோல் 63 காசும், டீசல் 79 காசும் உயர்ந்துள்ளது.



    அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் இரும்பு, டயர், ஆயில் போன்ற போக்குவரத்துக்கு தொடர்புடைய பொருட்கள் 4 சதவீதம் வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×