search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் தண்ணீர் லாரிகள் ‘ஸ்டிரைக்’ வாபஸ்
    X

    சென்னையில் தண்ணீர் லாரிகள் ‘ஸ்டிரைக்’ வாபஸ்

    தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை சீராகும் என தெரிகிறது.
    சென்னை:

    நிலத்தடி நீரை எடுக்க ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

    தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினையால் மக்கள் கடும் அவதிப்படும் சூழ்நிலை உருவானது.

    இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்படுவதாகவும் தற்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் அறிவித்தார்.

    நிலத்தடி நீரை எடுக்க ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது. நிலத்தடி நீரை கனிம வளப்பிரிவில் சேர்த்துள்ளதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்பான தடையை நீக்க வேண்டும்.

    கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும்.

    பருவமழை பொய்த்ததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டதாலும் மக்கள் கடும் குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். லாரி தண்ணீருக்காக மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

    தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மக்கள் மேலும் அவதிப்படுவார்கள், அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை சீராகும் என தெரிகிறது.

    Next Story
    ×