search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியில் வெற்றி பெறுவது மோடியா? ராகுலா? தந்தி டி.வி.யில் இன்று இரவு 9.30 மணிக்கு கருத்துக் கணிப்பு ஒளிபரப்பு
    X

    மத்தியில் வெற்றி பெறுவது மோடியா? ராகுலா? தந்தி டி.வி.யில் இன்று இரவு 9.30 மணிக்கு கருத்துக் கணிப்பு ஒளிபரப்பு

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை அமைக்கப் போவது மோடியா? ராகுலா? என்று தந்தி டி.வி. நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    சென்னை:

    தந்தி டி.வி.யில் இன்று முதல் புதன் கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதில் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 39 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளில் எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

    39 தொகுதிகளில் முந்துவது யார்? 22 தொகுதிகளின் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்? ஆட்சியை தக்க வைக்குமா அ.தி.மு.க.? திருப்பத்தை ஏற்படுத்துமா தி.மு.க.? அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறதா அ.ம.மு.க. போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லப் போகிறது மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சி.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் தேர்வு மோடியா? ராகுலா? 39 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு? போன்ற முக்கிய கேள்விகளுக்கு விடை சொல்ல தேர்தலுக்கு பிந்தைய பிரம்மாணட கருத்துக்கணிப்பை தந்தி டிவி நடத்திமுடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 11 ஆயிரத்து 700 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலைத் தாண்டி தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 22 தொகுதிகளின் இடைத்தேர்தல். இதற்கும் தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தி முடித்துள்ள தந்தி டி.வி. அதன் முடிவுகளை நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியிட உள்ளது. அதில். ஆட்சியை தக்க வைக்குமா அ.தி.மு.க? திருப்பத்தை ஏற்படுத்துமா தி.மு.க.? அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா அமமுக? போன்ற அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு விடை சொல்கிறது மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சி.

    Next Story
    ×