search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்கறி சமைத்த 5 பேர் கைது - வனத்துறையினர் நடவடிக்கை
    X

    மான்கறி சமைத்த 5 பேர் கைது - வனத்துறையினர் நடவடிக்கை

    மஞ்சூர் அருகே மான்கறி சமைத்த 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கிட்டட்டிமட்டம் வனப்பகுதியில் மான்கள், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் மர்ம நபர்கள் மான் இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து வன அலுவலர் குருசாமி தபேலா, உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், குந்தா, வனச்சரகர் சரவணன், வனவர்கள் ரவிக்குமார், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ஜெய்கணேஷ் ஆகியோர் கிட்டப்பட்டிமட்டம் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது வனப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மான் கறி சமைத்துக்கொண்டிருந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் பெள்ளத்திகம்பை சேர்ந்த சரவணன் (வயது 27), ரங்கசாமி (40), நாகேஷ் (39), ரமேஷ் (36), கிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது.

    மேலும் வனப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிந்த மான்பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது. இதனையறிந்த நாங்கள் வனப்பகுதியில் கிடந்த மானின் உடலை சமைப்பதற்காக கூறுபோட்டோம் என கூறியுள்ளனர்.

    அவர்கள் 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து மானின் இறைச்சி, கால்கள், தலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மான் வேட்டையில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்களா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×