search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓபிஎஸ் மகனை எம்.பி. என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர் கைது
    X

    ஓபிஎஸ் மகனை எம்.பி. என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர் கைது

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே கோவில் கல்வெட்டில் எம்.பி என ரவீந்திர நாத்குமார் பெயர் வைத்தது தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலய கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.

    ரவீந்திர நாத்குமார் பெயர் இடம் பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் என்பது தெரியவந்தது.

     தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்க வந்த அ.தி.மு.க வக்கீல் அணியினர்.

    இதனிடையே ரவீந்திர நாத்குமார் சார்பாக அ.தி.மு.க வக்கீல் அணியினர் இன்று மதியம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். இது தொடர்பாக ரவீந்திர நாத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பெயரை எம்.பி என பொறித்தது தொடர்பாக சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர் வேல்முருகன் மீது தேர்தல் விதிமீறல், நம்பிக்கை மோசடி, போலிஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.
    Next Story
    ×