search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பாளையம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டியவர் கைது
    X

    டி.என்.பாளையம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டியவர் கைது

    டி.என்.பாளையம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎன்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டிஎன்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம் பாளையம் வனப் பகுதியையொட்டிய பகுதியில் சந்தனம் மரம் வெட்டி எடுப்பதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    டிஎன்.பாளையம் வனசரகர் ஆலோசனையின் பேரில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது கணக்கம் பாளையம் வனப்பகுதியையொட்டிய இடத்தில் சென்ற போது சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் வனப் பகுதியில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை தோண்டி கொண்டிருந்தது தெரிய வந்தது.

    உடனே அந்த நபரை வனப் பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பங்களாபுதூர் அருகே உள்ள எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 57) என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணை நடத்தியதில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை விற்பனை செய்வதற்கு வெட்டி எடுப்பதை வனசரக அலுவலரிடம் அவர் ஒப்பு கொண்டார்.

    இதையடுத்து பிடிபட்ட பழனியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் ஜெயில் அடைக்க உத்தரவிடப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    டிஎன்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தன மரம் வெட்டி எடுத்த தகவல் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×